ஒரேநாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,492 க்கு விற்பனை.
ஆபரண தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,888-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.4,486-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,492க்கு விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.128 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,936 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,858 என்றும் ஒரு சவரன் ரூ.38,864 எனவும் விற்பனையாகி வருகிறது. மேலும், சென்னையில் இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து, ரூ.64.60 எனவும், ஒரு கிலோ விலை ரூ.64,600 எனவும் விற்பனையாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025