தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊரணி பகுதியில் செல்வராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவியும் நிகில், முகில் என இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் சமீபத்தில் திருச்சியில் உள்ள மகாராஜ் என்ற விடுதியில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் நேற்றிரவு அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக உறவினர் குரு கணேஷுக்கு, செல்வராஜ் என்பவர் செல்போனில் தகவல் அனுப்பியுள்ளார்.
பின்னர் இதனை பார்த்து அதிர்ந்த குரு கணேஷ், அவசர அவசரமாக அந்த விடுதிக்கு சென்றார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் செல்வராஜ் தங்கியிருந்த அறையின் கதவை திறந்து பார்த்த போது செல்லம், நிகில் மற்றும் முகில் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து சடலமாக கிடந்தனர். இதனிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்த செல்வராஜை தகவலறிந்து வந்த போலீசார் மீட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு அறையை சோதனை செய்ததில் செல்வராஜ் எழுதிய கடிதம் கிடைத்தது.
இந்நிலையில், அந்த கடிதத்தில் மன வளர்ச்சி குன்றிய தனது மூத்த மகன் நிகிலை சரியாக கவனிக்கை முடியாததாலும், கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது. அதனை பார்த்த போலீசார், மனைவி, மகன்களை செல்வராஜ்தான் கழுத்தறுத்து இருப்பார் என்பதால் மூவர் உயிரிழப்பையும் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…