UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவி ஜீஜீ..! வாழ்த்து தெரிவித்த அமைச்சர் சேகர் பாபு..!
UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவியை, அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடிமையியல் பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. முதற்கட்ட தேர்வு முடிந்து ஜூன் மாதமே முடிவுகள் வெளியாகின. இதனை அடுத்து, டிசம்பர் மாதம் முக்கிய தேர்வு முடிந்து, டிசம்பர் 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதனை அடுத்து, கடந்த மே 18ஆம் தேதி நேர்காணல் நடைபெற்றது. தற்போது இதற்கான மொத்த மதிப்பெண் பட்டியலும் வெளியாகியுள்ள்ளது.அதில், முதல் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவியை, அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து வாழ்த்தினார்.