ஜெய்பீம் நல்ல படம்..! அது பார்க்க வேண்டிய படம்..! – அண்ணாமலை
ஜெய்பீம் நல்ல படம். ஆனால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் படம் அமைந்திருக்கலாம்.
சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னை சேத்துப்பட்டில் டாக்டர் எம்.ஆர்.வெங்கடேஷ் அவர்கள் எழுதிய ‘Retainning Balance The External Way’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், ஜெய்பீம் நல்ல படம். ஆனால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் படம் அமைந்திருக்கலாம். ஆனாலும் அது ஒரு பார்க்க வேண்டிய படம் என்று தெரிவித்தார். மேலும் கோவை மாணவி தற்கொலை விவகாரம் குறித்து கூறுகையில், கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.