தென் சென்னை மண்ணின் மைந்தன் ஜெயவர்த்தன் : அமைச்சர் ஜெயக்குமார்
- அதிமுக சார்பில் தென் சென்னை தொகுதியில், ஜெயவர்த்தன் போட்டியிடவுள்ளார்.
- ஜெய வர்த்தன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், அதிமுக சார்பில் தென் சென்னை தொகுதியில், ஜெயவர்த்தன் போட்டியிடவுள்ளார். இவருக்கு எதிராக திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், தென் சென்னை மண்ணின் மைந்தன் ஜெய வர்த்தன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் 5 ஆண்டு காலமாக புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர் என்றும், அவரது தொகுதியில் இவர் சிறப்பாக பணியாற்றியவர் என்றும், அவரை பற்றிய எந்தவிதமான எதிர்மறையான விமர்சனங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் ஜெய வர்த்தன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.