துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகும் நாளுடன் விசாரணையை முடித்துக் கொள்ள ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும் , மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 22 ஆம் தேதியும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது.
ஆனால் சம்மனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் கடைசி நேரத்தில் வரும் 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அவர் ஆஜராகும் நாளுடன் விசாரணையை முடித்துக் கொள்வதாக ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், 14 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாக சசிகலா தரப்பு மனு செய்தது.இதனால் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதே போல் திமுக தலைவர் ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜ செந்தூர்பாண்டியன் கூறியது என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…