சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள்.இந்நிலையில் உயர்நீதிமன்றம் வழக்கை கையில் எடுத்துள்ளதால் உரிய நீதி கிடைக்கும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததால் உடலை பெற்றுக்கொண்டனர். பிரேதபரிசோதனை செய்த பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.