யார் இந்த ஜெயேந்திரர்? மறைந்த சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதியின் வாழ்க்கைக் குறிப்பு..
சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சங்கரமட பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 2016 இல் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
ஜெயேந்திர சரஸ்வதி வாழ்க்கைக் குறிப்பு:
1.1935 ஜூலை 18-ஆம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இருள்நீக்கியில் பிறந்தார்.
2.1954 மார்ச் 22-ஆம் தேதி காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
3.மறைந்த சந்திரசேகர சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதியை 1994-இல், காஞ்சி மடத்தின் 69-வது மடாதிபதியாகப் பதவியேற்றம் செய்து வைத்தார்.
4.ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் சுப்ரமணியம் மஹாதேவா.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.