ஜெயலலிதா இறந்த தேதி டிசம்பர் 5 அல்ல 4.! நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.!

Default Image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மூத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், கடைசி வரையில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது .

அந்த அறிக்கையில் இருந்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில்,  ஜெயலலிதா மயக்கம் அடைந்தது முதல் நடைபெற்ற சம்பவங்கள் ரகசியமாக இருக்கிறது.

சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியாவின் சாட்சியத்தின் படி, சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே நல்லுறவு இல்லை .உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா மீண்டும் ஏற்று கொண்டார் என சாட்சியங்கள் அடிப்படையில் தெரிகிறது.

ஜெயலலிதா இறந்த நேரம் சரியாக குறிப்பிடப்படவில்லை. டிசம்பர் 5, 2016 இரவு 11 மணி அளவில் ஜெயலலிதா இறந்தார் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால், சாட்சியங்கள் அடிப்படையில் இறப்பு டிசம்பர் 4ஆம் தேதி நேரம் பிற்பகல் 3 மணி முதல் 3.50 ஆக இருக்கலாம் என தெரிவருகிறது.

மருத்துவர்கள் ரிச்சர்ட் பீலே, ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஷமின் சர்மா ஆகியோர் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால், ஆஞ்சியோ சிகிச்சை கடைசி வரையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படவில்லை. அதனை யார் தடுத்தது என விசாரிக்க வேண்டும்.

சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்  ஆகியோரை குற்றவாளிகளாக கருதி விசாரணை மேற்கொள்ளலாம் என நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை குழு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்