ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்! 24ல் சிறப்பு மலர் வெளியீடு – இபிஎஸ் அறிவிப்பு
ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்தநாளையொட்டி 24-ஆம் தேதி சிறப்பு மலரை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்தநாளையொட்டி 24-ஆம் தேதி சிறப்பு மலர் வெளியிடப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா அவர்களின் 75-ஆவது பிறந்த நாளான வரும் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, ஜெயலலிதா அவர்களுடைய திரு உருவச் சிலைக்கு இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துவார்.
பின்னர் கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, “நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்” சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள “புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை” வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். மேலும், மார்ச் 5,6,7,10,11,12 ஆகிய 6 நாட்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கழகத்திற்கு பல்வேறு வகைகளில் வரலாற்று சிறப்புகளை பெற்று தந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழா. #Ammaforever pic.twitter.com/FfCJvtT99P
— AIADMK (@AIADMKOfficial) February 15, 2023