தனித்து போட்டியிடுவது தான் ஜெயலலிதாவின் கொள்கை-தம்பிதுரை
தனித்து போட்டியிடுவது தான் ஜெயலலிதாவின் கொள்கை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், தனித்து போட்டியிடுவது தான் ஜெயலலிதாவின் கொள்கை ஆகும். ஆனால் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தேர்தலில் போட்டியிட யார் வேண்டுமானாலும் விருப்ப மனு அளிக்கலாம்; நானும் விருப்ப மனு அளித்துள்ளேன்.கரூர் தொகுதியில் எனக்கு தான் சீட்டு கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது, கரூரில் நான் மட்டும்தான் இருக்கிறேனா என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.