“ஜெயலலிதா நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும்” – நடிகர் ரஜினிகாந்த் மரியாதை.!
ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, வேதா நிலையத்தில் உள்ள அவரது படத்துக்கு ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக அவரை நிற்கவைக்கிறது.
அதிமுக தலைமையிலான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என அவரால் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.
இந்த நிலையில், ஜெயலலிதா 77வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
வாசலிலே வந்து ரஜினியை வீட்டிற்குள் அழைத்து சென்ற ஜெ.தீபா, ஜெயலலிதா புகைப்படத்திற்கு குத்து விளக்கேற்றி ரஜினி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும். இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துளேன்” என்று கூறினார்.