ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தது…!ஆனால் என்னை அழைக்கவில்லை…!லண்டன் மருத்துவர் பகீர் தகவல்
சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்று லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேதெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த பொழுது அவருக்கு லண்டனின் புகழ்பெற்ற மருத்துவர் ரிச்சர்ட் பீலே மருத்துவம் பார்த்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம், அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்தது.
இதனையடுத்து ரிச்சர்ட் பீலே வரும் 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.இந்த விசாரணையில் ரிச்சர்ட் பீலே காணொலி காட்சி மூலம் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே 2017 பிப்ரவரி 6-ஆம் தேதி ரிச்சர்ட் பீலே பேசியபோது ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.அதில் சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை.மறைந்த ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததால் 2016 நவம்பர் 2-ஆம் தேதிக்கு பிறகு என்னை அழைக்கவில்லை. அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு இயன்ற அளவுக்கு சிறப்பான சிகிச்சையே அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.