ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு கால அவகாசம் கோரியிருந்தது.இதன் பின் வழக்கை 4 வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்.மேலும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…