ஜெயலலிதா மரணம் …!போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார்..!அங்குள்ள 2 பேரிடம் ஏன் விசாரிக்கவில்லை? அ.தி.மு.க. முன்னாள் எம்பி கேள்வி
போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார் என்பது உறுதி யாகியுள்ளது என்று அ.தி.மு.க. முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் நேற்று அ.தி.மு.க. முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.அதன் பின்னர் அவர் கூறுகையில், போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார் என்பது உறுதி யாகியுள்ளது .ஜெயலலிதா கீழே விழுந்த போது போயஸ் கார்டனில் இருந்த 2 பணிப்பெண்களிடம் ஏன் விசாரிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் மயக்கமான நிலையில்தான் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டார்.