ஜெயலலிதா மரணம்:விசாரணை ஆணையத்தில் தம்பிதுரை ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 23ஆம் தேதி(நாளை ) விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும்(நேற்று ), மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 22 ஆம் தேதியும்(இன்றும் ) ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் விசாரணைக்காக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகியுள்ளார்.சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேற்று விசாரணை நடந்த நிலையில் இன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் விசாரணை நடைபெறுகிறது.