ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு எதிரான வழக்கு நாளை விசாரணை

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற விசாரணையில், வழக்கை ஒத்தி வைக்கக்கோரிய அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை விடுத்தது.பின்னர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடருகிறது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.இதனால் வழக்கின் விசாரணை நாளை நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025