ஜெயலலிதா மரணம்:ஆறுமுகசாமி விசாரணைக்கு தடை கோரிய அப்போலோவின் மனு தள்ளுபடி
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரிய அப்போலோ நிர்வாகத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல்:
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து தங்கள் மருத்துவர்களிடம் ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது.பல்வேறுகட்டமாக விசாரணை நடைபெற்று வந்தது .
இந்நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரிய அப்போலோ நிர்வாகத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அதேபோல் சிறப்பு மருத்துவர் குழு அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை நிராகரித்து விட்டது.