ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நாடும் விழாவை முதல்வர் தொடக்கி வைத்தார்…!!
- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
- ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் 71 லட்சம் மரக்கன்று நாடும் விழாவை முதல்வர் தொடக்கி வைத்தார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயாலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா அதிமுக தலைமைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பிறந்தநாள் விழா_வை சிறப்பாக கொண்டாடினர்.அதோடு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியும் வெற்றி பெற வேண்டும் என்று சபதமும் எடுத்தனர்.
இதையடுத்து சென்னை கடற்கரை அருகே உள்ள பாரதிதாசன் சிலை அருகே நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் 71 லட்சம் மரக்கன்று நடும் விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மருத்துவ குணம் கொண்ட மகிழம்பூ கன்றை நட்டி வைத்து தொடங்கினார்.இதில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வவ்ம் , அமைச்சர்கள் தங்கமணி , வேல்மணி செங்கோட்டையன், செல்லூர் ராஜீ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.