ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு!

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் மற்றும் ஜெயலலிதாவின் 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Jayalalitha - Jewels

சென்னை : ஊழல் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நீதிமன்ற கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, ஜெயலலிதாவின் சொத்துக்கள் நேற்று தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) வசம் ஒப்படைக்கப்பட்டன.

அதில், 27 கிலோ தங்கம், 1,116 கிலோ வெள்ளி, வைர நகைகள், 10,000 புடவைகள், 750 செருப்பு ஜோடிகள், 1,526 ஏக்கர் நிலப் பத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் 8,376 புத்தகங்கள் ஆகியவை அடங்கும். இந்நிலையில், மொத்தமாக தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள், 1,526 ஏக்கர் ஆவணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக சொல்லபடுகிறது. மேலும், பல கோடி ரூபாய் மதிப்புடைய அந்த நகைகளின் பிரத்யேக போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில், ஜெயலலிதா உருவம், ஒட்டியானம், கிரீடம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. தற்போது, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தங்கத்திலான பொருட்களில் சிலவற்றை கர்நாடக அரசு வழக்கறிஞர் பட்டியலிட்டார்.

அதன்படி,

  • ஒட்டியாணம் – (1.2 கிலோ)
  • கிரீடம் – (1 கிலோ)
  • தங்க பேனா – (60 கிராம்)
  • ஜெயலலிதா முகம் பொறித்த தட்டு
  • தங்க வாள்
  • தங்க வாட்ச்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்