அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கல்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கலாகிறது. தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்ட முன்வடிவை நாளை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்தத்திற்கான சட்டமுன்வடிவு நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த சட்டப்பேரவையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டியிருந்தது. இதற்கு அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகத் குற்றசாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்தியிருக்காது என கூறி, இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என பதிலளித்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், மீண்டும் அதே பெயரில் செயல்பட வேண்டும் என்றும் அதிமுக கோரிக்கை வைத்தது. ஆனால், ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தியிருந்தனர்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…