ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை …!வெளிநாடு அழைத்து செல்லவேண்டுமென யாரும் கேட்கவில்லை …!முன்னாள் தலைமை செயலாளர் பரபரப்பு தகவல்
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமென யாரும் கேட்கவில்லை என்று முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பியது நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்.
நேற்று (அக்டோபர் 24 ஆம் தேதி )ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ் ஆஜரானார்.அதன் பின்னர் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் கூறுகையில், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமென யாரும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.