ஜெயலலிதா நினைவு நாள் ஏற்பாடுகள்…!அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம் …!
ஜெயலலிதா நினைவு நாள் ஏற்பாடுகள் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழக வெளியிட்ட அறிவிப்பில் ,டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா நினைவுநாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஊர்வலம் நடைபெறும் சென்னை அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஊர்வலமாக சென்று மலரஞ்சலி செலுத்தப்படும்.டிச.5ம் தேதி காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு நடைபெறுகிறது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாள் ஏற்பாடுகள் தொடர்பாகசென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.