அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்துள்ளது.
அதிமுகவில் இரட்டை தலைமை தான் என்பதை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்காக காட்சியில் சில சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார்களா என்ற கேள்வி கேட்பதற்கு இடமில்லை.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள் மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்வது என்பது நடக்காத காரியம். மேலும், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என அவர் கூறியுள்ளார்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…