” கவின் கலைக் கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்படும் ” முதல்வர் அறிவிப்பு…!!
- மத்திய பட்ஜெட்டில் அறிவித்த 6000 ரூபாய்_யின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் விழா மத்திய அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
- அரசு கவின் கலைக் கல்லூரிக்கு தமிழக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் படி முதல்தவனையாக 2000 ரூபாய் வழங்கும் விழா சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த தொகை தலா 2 ஆயிரம் வீதம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இந்நிலையில் இந்த தொடக்கவிழாவில் தமிழக அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றனர்.இதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , கூறுகையில் தமிழகத்தில் வேளாண் துறையில் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு இந்த த்திட்டம் உதவியாக இருக்கும் . அரசு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரிக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார்.