#BREAKING: ஜெயலலிதா நினைவில்லம்…பொதுமக்கள் செல்ல தடை நீட்டிப்பு..!
ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா வழக்கு தாக்கல் செய்தனர். அப்போது, நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், திறப்பு விழாவிற்கு தடை விதிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திறப்பு விழாவிற்கும், நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது என தனி நீதிபதி விதித்த தடை தொடரும் என தெரிவித்த நிலையில், “வேதா இல்லத்தை ” நினைவு இல்லமாக மாற்றப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிலையில், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடை நீட்டிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.