ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விசாரணை தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்க்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதா ஆடியோவை, மருத்துவர் அர்ச்சனா சுட்டிக்காட்டி உறுதி செய்தார்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும் என நம்புகிறேன்.மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட நாங்கள் தயாராகதான் இருக்கிறோம், ஆனால் ஆணையம் தடை போட்டுள்ளது.மேலும் இதுவரை விசாரிக்கப்பட்ட ஒருவரிடம் கூட சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…