ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? – கமல் ட்விட் ..!
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும். ஆனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா காரணமாக மக்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், ஜனவரி 26-ஆம் தேதி இன்று கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கிராமசபை கூட்டம் நடத்த அரசு அனுமதி வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?
— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2021
அதில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது? என தெரிவித்துள்ளார்.