அப்போலோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா…! யார் யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்பதை தெரிவித்த ராதாகிருஷ்ணன்…!
யார் யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்பதை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுக சாமி ஆணையம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பியது. டிசம்பர் 14ம் தேதி அதாவது நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன்பின் நேற்று ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது நேரில் பார்த்தது மற்றும் கண்ணாடி வழியாக பார்த்தது தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் அவசியம் ஏற்படவில்லை எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை குறித்த கேள்வி மிகுந்த வேதனை அளிப்பதாக ராதாகிருஷ்ணன் கூறினார்.யார் யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்பதையும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் என்றும் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.