ஜெயலலிதா இல்லை …!அதனால் எங்களை மிரட்டி பார்க்கின்றனர் …!முதலமைச்சர் பழனிசாமி
டெண்டர் விவகாரத்தில் என் விளக்கத்திற்கு திமுக பதில் சொல்லவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில்,டெண்டர் விவகாரத்தில் என் விளக்கத்திற்கு திமுக பதில் சொல்லவில்லை. பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக மக்களின் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்யும் . தினகரனை அழைக்கவில்லை, சிலர் பாதைமாறி சென்றார்கள், அவர்களை தான் அழைத்தோம் .ஜெயலலிதா இல்லாததால் எங்களை மிரட்டி பார்க்கின்றனர் .அதிமுகவை சேர்ந்தவர்கள் யாருக்கும் பயமில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.