ஜெயலலிதா ஆன்மீகவாதி தான்.. ஆனால்.., காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு பேட்டி.!

Published by
மணிகண்டன்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான் என்றும், ஆனால் அவர் மதவெறி பிடித்தவர் இல்லை என்றும் திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறினார்.

சில தினங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றில் பேசுகையில், ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றும்,  அவர் தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே பல்வேறு இடங்களில் காட்டினார் என்றும், தனது சம்பளத்தை கூட இந்து கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்தார் என்றும் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் அதிமுக வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலைகளை எழுந்தது. அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். அரசியல் உள்நோக்கத்திற்காக அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார் என்றும், ஜெயலலிதா அனைத்து மதத்திற்குமான தலைவர் என்றும் கருத்துக்களை கூறினர்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி எம்.பி திருநாவுக்கரசு அண்ணாமலையின் கருத்து பற்றி கூறுகையில், எனக்கு தெரிந்த வரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான். ஆனால் மதவெறி பிடித்தவர் இல்லை. தெய்வபக்தி உள்ளவர்கள் எல்லாம் மதவெறி பிடித்தவர்கள் அல்ல. எம்ஜிஆரும் சாமி கும்பிடுவார். சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் மதவெறி பிடித்தவர்கள் இல்லை. ஆன்மிகம் வேறு மதவெறி என்பது வேறு என திருநாவுக்கரசு தனது கருத்தை முன்வைத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

30 minutes ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

34 minutes ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

1 hour ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

1 hour ago

கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

2 hours ago

வயநாட்டில் வரலாற்று வெற்றி? ராகுல் காந்தி சாதனையை முறியடித்த பிரியங்கா காந்தி!

வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…

2 hours ago