ஜெயலலிதா மரண வழக்கை கிரிமினல் வழக்காக விசாரிக்க கோரிக்கை.! அமைச்சர் ரகுபதி தகவல்.!

Default Image

சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆணைய அறிக்கையை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் சம்பந்தபட்டவர்கள் மீது கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதன் உண்மை தன்மை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் பல்வேறு தகவல்கள், பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில் முக்கியமாக, சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை மேற்கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. ‘

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘ நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டது போல 5 பேரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசியல் லாபத்திற்காக கூறப்படவில்லை. ஆணையம் கூறுவது அனைத்தும் ஆணித்தனமான உண்மை. ‘ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில் , ‘ சட்டமன்றத்தில் இதனை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது குறித்து தமிழக உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்படும்’ என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்ட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்