கடலூர் கிராம தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார் என ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும்!

Default Image

கடலூர் கிராம தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார் என ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 ஜனவரி மாதம் வரை நடத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குமளங்குளம் கிராமத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலட்சுமி தனது எதிரணியை சேர்ந்த விஜயலட்சுமியை 2034 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார், இதனால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பின் சிறிது நேரத்திலேயே தேர்தல் அதிகாரிகளால் விஜயலக்ஷ்மி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

இதனால் ஜெயலட்சுமி உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்டு மனு அளித்துள்ளர். அதே போல விஜயலக்ஷ்மியும் வெற்றி பெற்றதாக அறிவித்த தன்னை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இன்னும் ஒரு வாரத்தில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்ட வேண்டும் எனவும், விஜயலட்சுமியின் பதவியேற்பு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்