ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை ஜாமீன்..!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமாருக்கும் பிரச்னை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாக மகேஷ் குமார் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயப்பிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யபட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.