திருப்போரூரில் திமுக எம்.எல்.ஏ. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. அதேபோல் திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிலையில், திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளிட்டு உள்ளார். அதில், ஊழல், ரவுடித்தனம், கொடநாடு சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவது, கொடநாட்டில் கொள்ளை, கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையானோர்களை காப்பாற்றுவது போன்றவற்றின் பிறப்பிடமாக இருக்கும் அதிமுக ஆட்சியில் இடம்பெற்ற அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை பார்த்து வன்முறை கட்சி என்று கூறுவது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்களின் உயிர் காக்கும் வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் செய்து கொள்ளையடித்து ஊழலில் ஊறிப் போயிருக்கும் ஜெயக்குமாருக்கு திமுகவைப் பற்றி விமர்சிக்க அடிப்படைத் தகுதி இல்லை, அருகதையும் இல்லை எனக் கூறினார். ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வானத்தை நோக்கி எம்.எல்.ஏ.வின் தந்தை சுட்டது திசை திருப்பப்பட்டுள்ளது. வானத்தை நோக்கி சுட்டதற்கு பொய் வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ.வை கைது செய்யப்பட்டது திட்டமிட்ட சதி.
தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சி போல் அமைச்சர் பேசுவது உள்நோக்கத்தின் வெளிப்பாடு என கூறினார்.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…