எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கவில்லை! இந்திய அணி தோல்வி குறித்து அமைச்சர் பேட்டி!

உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் நேற்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது . இந்திய அணி வீரர்களான ஜடேஜாவும், தோனியும் கடைசி வரை போராடியும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
இந்த நிலையில் இது குறித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அணியில் என்னை சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எனக்கு சான்ஸ் கொடுக்கவில்லை. வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். இந்த வருடம் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் தோற்றுள்ளோம். அடுத்த வரும் தேர்தல்களில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். அதுபோல இந்திய அணியும் கண்டிப்பாக வெற்றி பெரும். என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025