யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுகளில் கை வைக்க முடியாது – ஜெயக்குமார்

Published by
பாலா கலியமூர்த்தி

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல்.? 2026 தேர்தல் தான் இலக்கு.! விஜய் அறிவிப்பு.!

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை, போட்டியும் இல்லை . ஆனால், 2026 சட்டமன்றத்தில் போட்டியிடுவோம் என்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படைக் கொள்கையாக ” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், பிறப்பால் அனைவரும் சமம் என்பது தான் இதற்கு விளக்கமாகும்.

இதனிடையே, நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியல் என்பது பெருங்கடல், மிகப்பெரிய சமுத்திரம்.

ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம், பிளவுவாத அரசியல் கலாச்சாரம்

அதில், நீந்தி கரை சேர்பவர்களும் இருப்பார்கள், மூழ்கி போகிறவர்களும் இருப்பார்கள். தவெக கட்சி தலைவர் விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கி போகிறாரா என்று பார்க்கலாம். அதை தமிழ்நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். இதனால் பொறுத்திருந்து பார்ப்போம் மக்கள் தான் இறுதி எஜமானவர்கள். இருப்பினும், யார் கட்சி தொடங்கினாலும், அதிமுக ஓட்டுகளில் யாரும் கை வைக்க முடியாது. விஜய்யை எம்.ஜி.ஆர். போல சித்தரித்தால் அது அவங்களுக்கு வீழ்ச்சியாக முடியும் என்றும் நான் விஜய்யை சிறுமைப்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ரோட்டு கடையில் ட்ரீட் கொடுத்த விக்கி.. அசந்து போன நயன்.!

சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…

3 mins ago

AUS vs IND : ட்விஸ்ட் கொடுக்கும் பும்ரா கேப்பிடன்சி ..! அஸ்வின் இல்லை ..தடுமாறும் இந்திய அணி!

பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…

15 mins ago

ஐபிஎல் 2025 தொடங்கும் தேதி இது தான்! பிசிசிஐ போட்ட பக்கா பிளான்!

டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…

28 mins ago

எகிறிய தங்கம் விலை… தங்கம் விலை ரூ.640 உயர்வு!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…

1 hour ago

ரஜினி – சீமான் சந்திப்பு: விஜய்க்கு எதிரான நடவடிக்கை? பின்னணி என்ன?

சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா விவாகரத்து: “இருவரும் மகிழ்ச்சியாக இல்லை”…உண்மையை உடைத்த

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…

2 hours ago