பாஜகவுடன் கூட்டணி., அதிமுகவில் இருந்து விலகுகிறேனா.? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!
நான் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என பொய்யான செய்தி பரவுகிறது. அது உண்மையில்லை. பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நான் நிற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி வைத்தது. இந்த நிகழ்வில் அமித்ஷா உடன் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்ததை அடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக – பாஜக கூட்டணி பற்றி கூறுகையில், ” அதிமுக, பாஜகவோடு கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்தே விலகிவிடுவேன் என கூறினார். இந்த கூட்டணியால் அதிமுக கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு நிலை உள்ளது. இதனையும் மீறி தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அமைத்துள்ளார்.” என கூறினார்.
செய்தியில் உண்மையில்லை
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு அதிமுக முன்னால அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ” அதிமுக பாஜக கட்டுக்குள் வந்துவிட்டது என திருமாவளவன் விமர்சித்துள்ளார். மேலும், அதிமுக பாஜக கூட்டணி அமைத்தால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (தான்) அதிமுகவில் இருந்து விலகிவிடுவேன் எனக் கூறியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை.
அது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. அப்படி நான் எப்போது சொன்னேன்? கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத செய்தியை தான் கடந்த 4 நாட்களாக மீம்ஸ், வீடியோ வாயிலாக சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானம் கிடைத்தது. என்னால் அவர்கள் பலன் அடைந்ததில் மகிழ்ச்சி.
யார் வீட்டு வாசலிலும் நிற்க மாட்டேன் :
ஆனால் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நான் பாரம்பரியமான திராவிட குடும்பத்தை சார்ந்தவன். 75 ஆண்டுகாலம் இயக்கத்தில் பணியாற்றுகிறேன். எனது தந்தை வடசென்னை பெரியார் என அழைக்கப்பட்டவர். எனது பயணம் நீண்ட நெடிய திராவிட பாரம்பரியம் உடையது. பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நான் நிற்க மாட்டேன். தன்மானத்தோடு இருக்கக்கூடியவன். இந்த கட்சி தான் என்னை உலகம் முழுக்க அடையாளம் காட்டியது. என்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மா வழியில் எனது பயணம் தொடரும். யார் வீட்டு வாசலிலும் பதவிக்காக இந்த ஜெயக்குமார் நிற்க மாட்டான். அண்ணா சொன்னது போல பதவி தோளில் போட்டுள்ள துணடு தான் எனக்கு.” என ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்..,
எப்போதும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிடும் ஜெயக்குமார் இன்று, புரட்சி தலைவர் எம்ஜிஆர் , ஜெயலலிதா அம்மா என்று மட்டும் கூறுவதும், பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்க மாட்டேன் என ஜெயக்குமார் கூறியதும் அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025