பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றமத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் மனு அளித்துள்ளார்.
பேனா சின்னத்திற்கு எதிராக மீனவர்கள் சார்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தடை விதிக்க வேண்டும் என ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே, சென்னை மெரினா கடற்கரையில், கடலுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான வரைவு படத்தை சென்னை ஐஐடி நிபுணர் குழு தயாரித்துள்ளது. இதன்பின், மத்திய சுற்றுசூழல் வாரியத்தின் அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்து இருந்தது.
அதன்படி, சமீபத்தில் மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்று சூழல் வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில், மீனவர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
மேலும், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அரசு அனுமதி கேட்டுள்ளது. அவர்களும் அனுமதி அளித்து விட்டால், அடுத்ததாக கட்டுமான பணிகள் தூங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பேனா சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…