ஓபிஎஸ் தனிமரமாகி விட்ட விரக்தியில் பேசி வருகிறார் – ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச நாங்கள் தயாராக இல்லை என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச நாங்கள் தயாராக இல்லை. தனிமரம் ஆகிவிட்ட பன்னீர்செல்வம் விரக்தியின் வெளிப்பாடாகவே பேசி வருகிறார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு வேட்பாளரை நிறுத்தினால்கூட இரட்டை இலை முடங்காது. இரட்டை இலை முடக்கப்படும் என்பது வதந்தி. அது எந்த வகையிலும் நடக்காது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு, நீதிமன்றம் அங்கீகரித்த நிலையில், இரட்டை இலையில் போட்டியிடும் உரிமை அவருக்கு மட்டும் தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.