கடல் வத்தினாலும் வத்தும், ஜெயக்குமார் என்றுமே அதிமுக தான் – அமைச்சர் ஜெயக்குமார்.!

“கடல் வத்தினாலும் வத்தும், ஜெயக்குமார் என்றுமே அதிமுக தான்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இன்று காசிமேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உரிய நேரத்தில் முடிவெடுக்கும், முதல்வர் வேட்பாளர் பற்றி இப்போதைக்கு கருத்து கூறுவது அதிமுகவிற்கு பலவீனம் என கூறினார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று தெரிவித்தார். கூட்டணி பற்றி தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியதை பாஜகவின் நிலைப்பாடாக எடுக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அப்போது, திமுகவிற்கு செல்ல தூது விடுத்தீர்களா..? என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “கடல் வத்தினாலும் வத்தும், ஜெயக்குமார் என்றுமே அதிமுக தான்” என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025