முதல்வரின் வெளிநாட்டு பயணம்! அமைச்சர் ஜெயக்குமாரின் பதிலும் திமுக பொருளாளர் துரைமுருகனின் பதிலடியும்!

Default Image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை லண்டன், நியூயார்க், கலிஃபோர்னியா, துபாய் என வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது தனது பணிகளை வேறு அமைச்சருக்கு கொடுத்துவிட்டு போகாமல், அனைத்து பணிகளையும் தானே கவனித்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறுகையில், ‘தற்போது டெக்னலாலஜி  முன்னேறிவிட்டதால், எந்த ஒரு முக்கிய முடிவுகளானாலும், அதனை அவர் எடுத்துவிடுவார். ஆதலால் மாற்று தேவையில்லை ‘ என பதிலளித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் பதிலுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், ‘ முக்கிய முடிவுகளை எப்படியும் முதலமைச்சர் எடுக்கப்போவதில்லை. ஆதலால் அவருக்கு மாற்று தேவையில்லை.’ என தனது பாணியில் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்