#BREAKING: பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா போட்டி..!

Default Image

பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும்,மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிடயுள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிடயுள்ளனர். 

முதலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதியில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றோரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிடம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ம.ம.க. 2 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.

மமக போட்டியிடும் தொகுதிகள் அறிவித்தபோது வேட்பாளர்கள், சின்னம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என ஜவாஹிருல்லா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
tvk vijay ntk seeman
today rain news
shaam sivakarthikeyan
sunil gavaskar
dmk mk stalin annamalai
Pakistan for Champions Trophy defeat