மல்லிகை பூ ரூ.5,000க்கு விற்பனை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழ்நாட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5,000-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுபோன்று மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகைப் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மல்லிகை மற்றும் பிச்சிப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தோவாளை மலர் சந்தையில் நேற்று கிலோ ரூ.1,500க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ரூ.5,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் ஒரு கிலோ ரூ.1,000க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.5,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் கிலோ ரூ.1,500, முல்லை பூ கிலோ ரூ.1,400, ஜாதிப்பூ கிலோ ரூ.1,00க்கு விற்பனையாகிறது.