மதுரை எய்ம்ஸ் விவகாரம்.! இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி தரவில்லை.! வெளியான புதிய தகவல்.!
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்படும் என்கிற கேள்வி பலரது மனதில் இங்கு எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் கூட அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அவர்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதற்கு, மத்திய அரசு சார்பில், மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு ஜப்பானை சேர்ந்த ஜெய்கா எனும் நிறுவனம் 82 சதவீத கடனுதவியான இந்திய மதிப்பில் 1,621 கோடி ரூபாய் தரவேண்டும். அவர்கள் இன்னும் தரவில்லை.
மேலும், தற்போதைய விலை ஏற்றத்தை பொறுத்து வரையறுக்கப்பட்ட புதிய திட்ட அளவீட்டிற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனவும், மதுரை எய்ம்ஸ் தலைமை செயல் பொறியாளர் தகவல்களை தெரிவித்துள்ளார். இதன் மூலம் இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.