விளையாட்டு போட்டியாக ஜல்லிக்கட்டு மாற்றப்படும் – அமைச்சர் மெய்யநாதன்
ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக மாற்ற விரைவில் சட்ட நடவடிக்கை என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், உலகத்திலேயே இல்லாத அளவிற்கு மதுரையில் மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. அடுத்தகட்டமாக ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக மாற்ற விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கைகள் முழு வடிவம் பெற்றதுக்கு பின்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லுவோம். இதன்பின் ஜல்லிக்கட்டை விளையாட்டு போட்டியாக மாற்ற எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் இந்தாண்டு ஜல்லிக்கட்டை விளையாட்டை மாற்றுவதற்கு மாற்ற வாய்ப்பில்லை. கட்டுமான பணிகள் நடைபெற வேண்டும், என்னென்ன விதிகள் என்பதை உருவாக்கப்பட வேண்டும். விளையாட்டுத்துறையை முதலமைச்சரே நேரடியாக கவனித்து வருகிறார். தேவைக்கேற்ப சிறப்பு நிதிகளை ஒதுக்கி விளையாட்டுத்துறை மேம்படுத்தி வருகிறார்.
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றுவதற்காக நிதிகளை ஒதுக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலமாகத்தான் நாம் வெற்றி பெற முடியும். முதற்கட்டமாக தமிழக முழுவதும் தேங்கி இருக்கிற பிளாஸ்டி பொருட்களை சேகரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.