ஜல்லிக்கட்டு தீர்ப்பு! இதற்கு காரணம் பிரதமர் மோடி தான் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்
காங்கிரஸ் கட்சியாலும், கூட்டணி கட்சிகளாலும் தமிழக மக்களை இனி ஏமாற்ற முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என்றும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதுமட்டுமில்லாமல், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு அளித்து, தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், ஜல்லிக்கட்டு பிரச்னையில் முதலிருந்தே நமக்கு உறுதுணையாக இருந்தவர் பிரதமர் மோடி மட்டுமே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழகத்தின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதை உறுதி செய்யும் முயற்சிக்கு நமது பிரதமருக்கு, தமிழ்நாடு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஜூலை 11, 2011 அன்று, முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை அறிமுகப்படுத்தினார். பின்னர் மே 2014-இல், உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு மீதான தடையை உறுதி செய்தபோது, ஜெய்ராம் ரமேஷ் தீர்ப்பை வரவேற்று, “காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு” முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறினார். 2015 டிசம்பரில், முன்னாள் பிரதமரும், அப்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான மன்மோகன் சிங், மனிதநேய சங்கத்தின் கடிதத்திற்கு பதிலளித்து, காளைச் சண்டையை ஊக்கப்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
2016 ஜனவரியில், நமது பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும், தடையை நீடிப்பதற்கான அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்சநீதிமன்றத்தால், அரசு உத்தரவு நிறுத்தப்பட்ட பிறகு, ஒரு அரசாணையை இயற்றுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
2017 ஜனவரியில் பல வற்புறுத்தலுக்கும், ஆலோசித்தலுக்கும் பிறகு இதுவே செய்யப்பட்டது. மே 2016-இல், தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு முழுவதுமாக தடை செய்யப்படும் என்று கூறியது. தமிழ்நாட்டின் கலாசாரத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்பு, இன்று திமுகவுடன் இணைந்து இந்த அவலங்களை துடைத்தழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
2022 டிசம்பரில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் திரு துஷார் மேத்தா, அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் வழக்கின் ஒவ்வொரு அம்சமும் அளிக்கப்பட்டதாகக் கூறினார்.
இந்தத் தருணத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌமியா ரெட்டியும் ஒருவர். சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக விசிகே தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியாலும், கூட்டணி கட்சிகளாலும் தமிழக மக்களை இனி ஏமாற்ற முடியாது. எனவே, ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பம் முதல் இன்று வரை யாரேனும் நின்றிருந்தால், அது நமது பிரதமர் மோடி தான் என்று மாநில தலைவரை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
On behalf of @BJP4TamilNadu & the people of Tamil Nadu, we thank our Hon PM Thiru @narendramodi avl for his persistent effort to ensure the ban on the Cultural sport of TN, Jallikattu was lifted in its entirety.
The Supreme Court today dismissed a batch of petitions that… pic.twitter.com/xdFbO4bMp7
— K.Annamalai (@annamalai_k) May 18, 2023