ஜல்லிக்கட்டு: அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் – அதிமுக எம்.எல்.ஏ கோரிக்கை
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் கோரிக்கை.
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்றாவது நாள் நடைபெற்றது. இதில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம், ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெப்பதற்காக பல்வேறு பகுதிகளில் போரட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பொதுமக்கள் மீது வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ளது.
ஆதலால், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அந்த வழக்குகள் அனைத்தையும் பரிசீலனை செய்து தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.