ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காருக்கு பதிலாக உழவுக்கருவிகள், நிலம் ஆகியவற்றை தரலாம் – இயக்குனர் தங்கர் பச்சான்!
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காருக்கு பதிலாக உழவுக்கருவிகள், நிலம் ஆகியவற்றை தரலாம் என இயக்குனர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளை மாட்டின் உரிமையாளர்களுக்கு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள் காரின் தொகைக்கு ஈடாக உழவுக் கழிவுகள், மாடு அல்லது நிலம் போன்றவற்றை தந்து வீரர்களுடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தி தரலாம் எனவும், காரை வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் போடுவதற்கே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும். எனவே முதல்வர் தயவுகூர்ந்து இதனை பரிசீலிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.