ஜல்லிக்கட்டு: சமூகவலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு – மதுரை காவல் கண்கணிப்பாளர்

Default Image

ஜல்லிக்கட்டு போட்டிகளை சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மதுரை காவல் கண்கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டது.

நாளை மறுநாள் முதல் 31-ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று மதுரை காவல் கண்கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்